புதன், 1 பிப்ரவரி, 2012

இன்னும் என்னிதயத்தின் எதோ ஓர் ஓரம்...


நாம்
முதன்முதலில்
சந்தித்த
அந்த
நிலா நாளில்
தெரிந்தும் தெரியாமல்
என்னை
பைத்தியமாக்கிய
அந்த
ஸ்பரிஷம்...


அந்த
மழை
 நாளில்
ஒற்றை ரோஜாவுடன்
கதகதப்பாய்
விட்டுச்சென்ற
உன்
சுவாசக்காற்று...


அறியாத
வயதில்
அந்தியில்
நடந்த
அந்த
அடர்ந்த
உணர்வுப்
பரிமாற்றங்கள்...


யாரோ
யோசித்து
எழுதிய
உன் முதல்
வாழ்த்தட்டையில்
'என்னவளுக்கு'
என்று
உன் உயிர்
எழுத்து...


அந்த
முதல்
பயணத்தில்
தோளில்
எனை ஏற்று
காதலாய்
வருடிய
உன்
விரல்
நுனிகள்...


நம்முதல்
பிரிவில்
மூர்ச்சையாகிப்
போய்
பின்
உனக்காய்
படபடத்து
காத்திருந்த
என்
இதயம்...


அவசரம்
அழித்து
அரை
குறையாய்
நீ தந்த
அந்த
முத்தத்தின்
ஈரம்...


அத்தனையும்
ஏனோ
இன்னும்
என் இதயத்தின்
எதோ ஓர்
ஓரம்
தேடிக்கொண்டு
தான்
இருக்கிறது..
நீ
ஒரு
நூற்றாண்டாவது
முழுதாய்
என்னவன்
என்பதை
கர்வத்துடன்
புரிந்த
பின்னும்..
 






30 மறுமொழிகள்:

இருதயம் சொன்னது…

Wow..... !....

ராஜி சொன்னது…

அந்த
முதல்
பயணத்தில்
தோளில்
எனை ஏற்று
காதலாய்
வருடிய
உன்
விரல்
நுனிகள்...
>>>
முதல் வருடலை எவ்வளவு காலங்கள் கழிந்த பின்னும் மறக்க முடியாது சகோ

Riyas சொன்னது…

Nice poems, friend

தனிமரம் சொன்னது…

முதல் தொடுதலையும் முதல் வாழ்த்து அட்டையையும் மறக்க முடியாத உணர்வைச் சொல்லும் கவிதை அருமை.

துரைடேனியல் சொன்னது…

Arumai. Azhagana kavithai Sir. Vaalthukkal.

TM 4.

kavithai (kovaikkavi) சொன்னது…

''..அந்த
மழை
நாளில்
ஒற்றை ரோஜாவுடன்
கதகதப்பாய்
விட்டுச்சென்ற
உன்
சுவாசக்காற்று...''
ஆகா! அருமையான காதல் வரிகள் ..வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

விக்கியுலகம் சொன்னது…

கவிதை அருமை

Ramani சொன்னது…

முதல் பார்வை முதல் வார்த்தை முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம் முதல் இரவு
இவைகளை எப்படி மறக்க முடியும்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

காதலை எப்படிச் சொன்னாலும் இனிக்கிறது.அழகு வரிகள் ரெவரி !

Mahan.Thamesh சொன்னது…

முதல் காதல் இனிக்கிறது நண்பாரே உங்கள் கவிதையில் , அருமை ;

guna thamizh சொன்னது…

அருமை..

கணேஷ் சொன்னது…

ஒரு நூற்றாண்டாவது என்னவன்! பிரமாதம் ஸார்! எத்தனை எத்தனை கவிஞர்கள் எழுதினாலும் காதல் இன்னும் அழகுதான்! மிகவும் ரசிக்க முடிந்தது!

K.s.s.Rajh சொன்னது…

அட அருமையான கவிதை பாஸ்
முதல்காதல்,முதல் ஸ்பரிசம் எப்பவும் நினைவில் நிற்கும்

dhanasekaran .S சொன்னது…

சரம் சரமாய் வந்து விழும் அழகிய கவிதை வாழ்த்துகள்

sasikala சொன்னது…

காதலாய்
வருடிய
உன்
விரல்
நுனிகள்...அருமையான வரிகள்

Mohamed Faaique சொன்னது…

நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு சந்தர்ப்பமும் சூப்பர்..

அழகானதொரு கவிதை உங்கள் ஸ்டைலில்....

மகேந்திரன் சொன்னது…

முதல் என்றால் முதல் தான்
அதற்கு அடுத்து வருவதெல்லாம்
நினைவில் இருப்பதில்லை...

அழகான கவிதை சகோதரரே..
திரும்பத் திரும்ப படித்தாலும்
முதலாக படிப்பது போலவே ஒரு உணர்வு...

ரசிகன் சொன்னது…

இது போல வாழ இன்னும் ஓர் ஆயுள் வேண்டும்.

கவிதை அருமை தோழர்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான கவிதை....

முதல் வருடல், முதல் முத்தம் எல்லாமே இனிமையாய் கவிதையில் கொண்டுவந்தது அழகு....

ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணா,

ஓட்டு மட்டும் போட்டு விட்டு போகிறேன்.
பின்னர் வந்து கருத்துரை தருகிறேன்.

ஆமினா சொன்னது…

//அவசரம்
அழித்து//

அவசரம் அறிந்து என வருமா??

அழகிய வரிகள்.. அழகான காதலில் பிரதிபலிப்பு

ரெவெரி சொன்னது…

நன்றி நட்புக்களே உங்கள் அழகு மறுமொழிகளுக்கு...

சகோதரி ஆமீனா...அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்...

எதுவுமே நிதானமாய் இருந்தாலும் முன்னனுபவம் இல்லாமையால் அரைகுறையாய் போய்விடுவது இயல்பு தானே... -:)

ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் சொன்னது…

உரிமையுள்ளவர்களின் நினைவலைகள், என்றுமே எம்முடன் தொடரும் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

//நம்முதல்
பிரிவில்
மூர்ச்சையாகிப்
போய்
பின்
உனக்காய்
படபடத்து
காத்திருந்த
என்
இதயம்..//

முதல் பிரிவில் மூர்ச்சையாய்ப்போய்....ரசிக்கவைத்த வரிகள்.

விமலன் சொன்னது…

//ஒரு நூற்றாண்டவது என்னவள் அன்பதை புரிந்த பின்னும்//இந்த வார்த்தைகள் காதலிக்கு மட்டும்தான் செல்லுமா?

சந்திரகௌரி சொன்னது…

ஆழமாக சிந்தித்து நேசித்து எழுதிய கவிதை. அருமை

ananthu சொன்னது…

கலக்கிட்டீங்க , வாழ்த்துக்கள் !

தமிழ்தோட்டம் சொன்னது…

அருமையான வரிகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ராஜி சொன்னது…

தங்கள் எழுத்துக்கு ஒரு மரியாதை செய்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்வையிட வரவும் சகோதரரே.
http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_06.html

ரெவெரி சொன்னது…

நன்றி நட்புக்களே உங்கள் தொடர் ஆதரவுக்கு...
நன்றி சகோதரி ராஜி உங்கள் விருதுக்கு...